தமிழ்நாடு

திணறல்! ஜமாபந்தி கணக்குகளை ஒப்படைக்க வி.ஏ.ஓ.,க்கள்...மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் குழப்பம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 திணறல்!  ஜமாபந்தி கணக்குகளை ஒப்படைக்க வி.ஏ.ஓ.,க்கள்...மாவட்ட நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பால் குழப்பம்

மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே 15ல் துவங்கி ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் ஜமாபந்தி துவங்கும்.

இதற்கு அந்தந்த தாலுகாவிற்குட்பட்ட கிராம வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் பகுதிகளில் உள்ள நெல், கரும்பு, மர பயிர் ஆகிய சாகுபடி கணக்குகள் மற்றும் பிறப்பு, இறப்பு தாக்கல்; முதியோர் உதவிதொகை கணக்குகள்; அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் செலுத்திய வரி உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு, ஜமாபந்தியின்போது அதிகாரியிடம் ஒப்படைப்பர்.இந்நிலையில், நடப்பாண்டில் வி.ஏ.ஓ.,க்கள் உட்பட வருவாய்த் துறையினர் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், கடந்த 23ம் தேதி அனைத்து தாலுகாவிலும் ஜமாபந்தியை வரும் 25, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடத்த வேண்டும். அதற்கான அதிகாரிகளையும் நியமித்து அறிவிப்பை கலெக்டர் வெளியிட்டார்.இந்த திடீர் அறிவிப்பால் மாவட்டத்தில் உள்ள வி.ஏ.ஓ.,க்கள் ஜமாபந்தி கணக்குகளை சரிவர பார்க்க முடியாமல் என்ன செய்வதென்று புரியாமல் திணறி வருகின்றனர். அதன்படி, திட்டக்குடி தாலுகாவில் 25ம் தேதி (இன்று) பெண்ணாடம் குறுவட்டம், 26ம் தேதி திட்டக்குடி கிழக்கு, 29 திட்டக்குடி மேற்கு, தொழுதுார் ஆகிய குறுவட்ட கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. இதே போன்று, மாவட்டத்தின் பிற தாலுகாவிலும் இதே தேதிகளில்தான் ஜமாபந்தி நடக்கிறது.

இது குறித்து, வி.ஏ.ஓ., ஒருவர் கூறுகையில், 'நாங்கள் கடந்த பிப்ரவரியில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இதனால் மற்ற வருவாய் பணிகளை பார்க்க முடிய வில்லை. ஆனால் ஜமாபந்தி நடத்துமாறு, கலெக்டர் திடீரென அறிவித்ததால் கிராம கணக்குளை சரிபார்க்க போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.மேலும், திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று விகிதம் அதிகமாக உள்ளதால், அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஜமாபந்தியை ரத்து செய்துள்ளது.

நம் மாவட்டத்தில் ரத்து செய்யவில்லை என்றாலும் எங்களுக்கு கால அவகாசம் கொடுத்து அறிவித்திருந்தால் ஜமாபந்தியில் கணக்குளை ஒப்படைக்க சுலபமாக இருக்கும்.இது குறித்து கலெக்டர் ஆலோசனை செய்து, கணக்குகளை சரி பார்க்க கால அவகாசம் அளிக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X