பொது செய்தி

தமிழ்நாடு

விருதை, வடலுார் பள்ளிகளுக்குபாட புத்தகம் அனுப்பி வைப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம், வடலுார் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான முதல்பருவ பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

விருத்தாசலம், வடலுார் கல்வி மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள் விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் வந்திறங்கின.அந்த பாடப்புத்தகங்களை, டி.இ.ஓ., பாண்டித்துரை முன்னிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்பாசிரியர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக பள்ளி நிர்வாகம் சார்பில் டாடா ஏஸ் வேனில், புத்தகங்கள் பெற்றுச் செல்லும் பணியை, சி.இ.ஓ., ரோஸ்லின் நிர்மலா பார்வையிட்டார்.மேலும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், நாளை மறுநாள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X