கடலுார் நகராட்சி வாயில் அடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் நகராட்சி வாயில் அடைப்பு

Added : ஜூன் 24, 2020
Share

கடலுார் : கடலுார் நகராட்சி அலுவலகத்திற்குள் கொரோனா பாதித்த நபர் வந்ததால், அலுவலக பிரதான வாயில் மூடப்பட்டது.

கடலுார் திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவிராயர் கோவில் தெருவைச்சேர்ந்த நகை வியாபாரி திருச்சி சென்று திரும்பியிருந்தார். அதனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு தெரிந்துகொள்ள அவர் நேற்று முன்தினம் மாலை நகராட்சி அலுவலகம் வந்தார்.கொரோனா பாதித்தோர் பட்டியலில் அவர் பெயர் இருந்ததால் நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நகராட்சி அலுவலகம் மூடப்பட்டு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. நேற்று காலை அலுவலக நுழைவு வாயிலை அடைத்து, பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. அலுவலகம் வந்தவர்களை், நுழைவு வாயிலிலேயே விசாரித்து அனுப்பினர். தவிர்க்க முடியாத பணிகளாக இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அலுவலகத்திற்குள் ஊழியர்களும் குறைந்த அளவிலேயே பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X