பொது செய்தி

தமிழ்நாடு

கொப்பரை கொள்முதல் நாளை முதல் துவக்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; புதிய குறைந்தபட்ச ஆதார விலையின்படி, தமிழகத்தில், கொப்பரை தேங்காய் கொள்முதல் துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட, 21 மாவட்டங்களில், தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இம்மாவட்டங்களில் உற்பத்தியாகும் கொப்பரை, மத்திய அரசின் கீழ் இயங்கும், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு வாயிலாக, அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில், கொப்பரை கொள்முதலுக்கு, புதிய குறைந்தபட்ச ஆதார விலையை, மத்திய வேளாண் அமைச்சகம், சமீபத்தில் நிர்ணயம் செய்திருந்தது.

அதன்படி, அரவை கொப்பரை கொள்முதல் விலையாக, கிலோ, 99.6௦ ரூபாய், பந்து கொப்பரை கிலோ, 103 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய விலையில், கொப்பரை கொள்முதல் செய்யும் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என, வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் வணிகப் பிரிவு இயக்குனர் சிரு ஆகியோர் தரப்பில், மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதை ஏற்று, கொப்பரை கொள்முதலை, நாளை முதல் துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கொள்முதல் காலத்தில், தமிழகத்தில், 39 ஆயிரத்து, 500 டன் அரவை கொப்பரையும், 500 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஆறு மாதங்களில் கொள்முதல் பணியை முடிக்க, அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கொப்பரைக்கான பணத்தை, 30 நாட்களில், அவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X