வெளிநாடுகளில் தவித்த 608 பேர் சென்னை வருகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாடுகளில் தவித்த 608 பேர் சென்னை வருகை

Added : ஜூன் 24, 2020
Share

சென்னை; மலேஷியா, சிங்கப்பூர், ரஷ்யா மற்றும் பக்ரைன் நாடுகளிலிருந்து, நான்கு சிறப்பு விமானங்கள், நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்தன. அந்த விமானங்களில், 608 பேர் வந்தனர்.

அவர்கள் அனைவருக்கும், விமான நிலையத்தில், மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தனிமைப்படுத்துதலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.மலேஷியா நாட்டின் தலைநகரிலிருந்து, நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்த சிறப்பு விமானத்தில், 173 இந்தியர்கள் வந்தனர். அந்த விமானத்தில் வந்த, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி, 46, என்பவருக்கு, விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அந்த சிறப்பு விமானம், சென்னையில் தரையிறங்கியவுடன், விமான நிலையத்தில் தயாராக இருந்த மருத்துவக் குழுவினர், மாடசாமியை பரிசோதித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக, ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

சென்னையிலிருந்து நேற்று, டில்லி, கோல்கட்டா, மதுரை, திருச்சி, துாத்துக்குடி, கோவை உள்ளிட்ட, 31 நகரங்களுக்கு, குறைந்த பயணியருடன், விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நகரங்களில் இருந்து, 31 விமானங்கள், சென்னைக்கு வந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X