பொது செய்தி

தமிழ்நாடு

சீன பொருட்களை எரித்த இயக்குனர்

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; 'சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணிக்க வேண்டும்' என, தமிழ் திரையுலகினர் வேண்டுகோள் விடுத்த நிலையில், இயக்குனர் சக்தி சிதம்பரம், தன் வீட்டிலிருந்த சீன தயாரிப்பு பொருட்களை தீ வைத்து எரித்தார்.

நடிகையர் சாக் ஷி அகர்வால், சனம் ஷெட்டி உள்ளிட்டோர், 'சீன தயாரிப்பு பொருட்களை புறக்கணித்து, இந்திய தயாரிப்பு பொருட்களுக்கு ஆதரவு தர வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், சார்லி சாப்ளின், மகாநடிகர் உட்பட, பல படங்களை இயக்கிய சக்தி சிதம்பரம், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டில் இருந்த சீன தயாரிப்பு பொருட்களை, தீ வைத்து எரித்தார்.

இதில், டேப்ரிக்கார்டர்கள், மொபைல் போன் உள்ளிட்ட, எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. இது குறித்து, சக்தி சிதம்பரம் கூறியதாவது:இந்திய வீரர்கள், 20 பேரை கொன்று மிரட்டி வரும் சீனா மீது, பொருளாதார தடை விதிக்க வேண்டும். அவர்கள் தயாரித்த பொருட்களை, நாம் யாரும் பயன்படுத்தக்கூடாது. அந்த வகையில், நாமே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, சீன பொருட்களை தீயிட்டு எரித்தேன். இனி நான், சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்த மாட்டேன். திரையுலகினரும், சீன தயாரிப்பை பயன்படுத்த வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
25-ஜூன்-202009:22:01 IST Report Abuse
Srinivasan Rangarajan சுதந்திர போராட்ட காலத்தில் அந்நிய பொருட்களை 'பகிஷ்கரித்தனர்' காந்தியின் வேண்டுகோளை ஏற்று. அப்போது அந்நிய துணிகளை நாடு முழுவதும் தீயிட்டு கொளுத்தினர். அந்த நாள் ஞாபகம் வந்ததே.. Well done, Mr.Shakthi Chidambaram. Mr.Sakthi Chidambaram has set an example for others to follow. But his (more famous) name sake Mr.P.Chidambaram is not at all in favour of banning Chinese goods. His reasoning is strange and false. As China's exports to India is a very small fraction of China's total exports,it will not affect China. But Chinese spokesperson has requested India not to stop imports from them. So our former FM is clearly lying.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X