பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து திட்ட பணிகள் முதல்வர் ஆய்வால் கலக்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; குடிமராமத்து திட்ட பணிகளை, முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதால் பொதுப்பணி துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.பொதுப்பணி துறை பராமரிப்பில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

முறையான பராமரிப்பின்மை காரணமாக, பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த ஏரிகளை புனரமைத்து, பாசன தேவையை பூர்த்தி செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு, குடிமராமத்து திட்டம் என, பெயரிடப்பட்டு உள்ளது. 499 கோடி ரூபாய்நடப்பாண்டில் இந்த திட்டத்திற்கு, 499 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, 1,387 ஏரிகள் புனரமைக்கப்பட உள்ளன. ஏரிகளை புனரமைக்கும் போது, அவற்றை பயன்படுத்தும் விவசாயிகளை ஒருங்கிணைத்து, பாசனதாரர்கள் சங்கத்தை அமைக்க வேண்டும். இந்த சங்கம் வாயிலாகவே, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான பணிகளை, பொதுப்பணி துறையினர் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில், பாசனதாரர்கள் சங்கம் அமைப்பதில், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. பல்வேறு காரணங்களால், பணிகளை துவங்குவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் அதிர்ச்சிஇதேநிலை தொடர்ந்தால், வடகிழக்கு பருவமழையில் கிடைக்கும் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், குடிமராமத்து திட்ட பணிகளை, மாவட்ட வாரியாக, முதல்வர் இ.பி.எஸ்., ஆய்வு செய்யவுள்ளார். இதற்காக, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு செல்ல உள்ளார். இதனால், பொதுப்பணி துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக ஆலோசனை நடத்திய, பொதுப்பணி துறை அதிகாரிகள், பணிகள் முடிந்த இடங்களுக்கு மட்டும், முதல்வரை அழைத்து சென்று காட்ட முடிவெடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X