அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாவட்ட தலைவர்களை மாற்ற அழகிரி அதிரடி நடவடிக்கை

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
 மாவட்ட தலைவர்களை மாற்ற அழகிரி அதிரடி நடவடிக்கை

-கொரோனா நிவாரண பணிகளில், சரிவர ஈடுபடாத, 30 மாவட்ட தலைவர்களை மாற்றி, புதிய தலைவர்களை நியமிப்பதற்கான பட்டியலை, டில்லி மேலிடத்திற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அனுப்பியுள்ளார்.

தமிழக காங்கிரசில், 72 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இதில், தென்சென்னை, கோவை, திருநெல்வேலி ஆகிய, மூன்று மாவட்ட தலைவர் பதவிகள் காலியாக உள்ளன. மேலும், 30 மாவட்டங்களுக்கு, புதிய தலைவர்களை நியமிக்கும்படி, மேலிடத்திற்கு, அழகிரி பரிந்துரைத்துள்ளார்.இப்பட்டியலில், திருநாவுக்கரசர், இளங்கோவனின் ஆதரவாளர்கள் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அழகிரி, தங்கபாலு, வசந்தகுமார், ஜெயகுமார், மாணிக்தாகூர், கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:பொது மக்களுக்கு, கொரோனா நிவாரண உதவிகள் செய்யாமல், ராகுல் பிறந்த நாளை கொண்டாடாமல் இருந்த, மாவட்ட தலைவர்கள் சிலரை விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.புதிய தலைவர்கள் பட்டியலுக்கு, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தரப்பில், இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால், காங்கிரஸ் அமைப்பு பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வாயிலாக, பட்டியலை வெளியிடுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.அதற்கு முன், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால், பட்டியல் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின

. - நமது நிருபர்

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Kirubakaran - Doha,கத்தார்
25-ஜூன்-202011:40:24 IST Report Abuse
G.Kirubakaran ஒரு நாள் கூட, ஒரு காங்கிரஸ் ஆளை கூட கோரோனோ தடுப்பு, நிவாரணம் செய்யவில்லை -எந்த காங்கிரஸ் தலைவரும். இப்படியே ஊழல் செஞ்சு பொழச்சு இருங்கட நாடு உருப்பட்ட விடும்.
Rate this:
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
25-ஜூன்-202011:32:51 IST Report Abuse
KUMAR. S கொடி பிடிக்க ஆளில்லை கட்சியில். தொண்டர்கள் இல்லை. தடி எடுத்தவர்கள் எல்லாம் தலைவர்கள்.. சிவாஜி கட்சியில் இருந்தவரை அவரது ரசிகர் மன்றத்தினரை வைத்து காலத்தை ஓட்டியவர்கள்..இப்படியே இருந்தா கட்சி உருப்படாது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
25-ஜூன்-202010:56:11 IST Report Abuse
Girija மொதல்ல ஆளு இருக்கா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X