பொது செய்தி

தமிழ்நாடு

1,069 கர்ப்பிணியருக்கு கொரோனா

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை: சென்னையில், 1,069 கர்ப்பிணியர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 150 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, 126 பேர்; எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், 285 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, 209 பேர் குணமடைந்துள்ளனர்.

கஸ்துாரிபா காந்தி அரசு மருத்துவமனையில், 248 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, 209 பேர்; ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில், 386 கர்ப்பிணியர் பாதிக்கப்பட்டு, 383 பேர் குணமடைந்துஉள்ளனர். பாதிக்கப்பட்ட பலருக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தொற்று ஏற்படாத வகையில் தடுக்கப்பட்டுள்ளது. தாய், குழந்தைகள், நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.பாதிக்கப்பட்ட, 1,069 பேரில், 927 பேர் வீடு திரும்பியுள்ளனர்; மற்றவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X