அரசியல் செய்தி

தமிழ்நாடு

'குறை சொல்வதும், குழப்புவதும் எளிது': உதயகுமார்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; ''குறை சொல்வது, குழப்புவது, அனைவருக்கும் எளிது. அதற்கு சவால் கிடையாது. எளிதாக சேற்றை வாரி இறைக்கலாம். ஆனால், அது அறிவுப்பூர்வமான செயல் அல்ல,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை, புளியந்தோப்பு, கே.பி.பூங்கா பகுதியில் உள்ள, குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 1,400 படுக்கை வசதி உடைய, கொரோனா சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளது.இதை, அமைச்சர் உதய குமார், நேற்று காலை பார்வையிட்டார்.

அத்தியாவசிய பொருட்கள்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திரு.வி.க.நகர் மண்டலம், நோய் தொற்று பாதிப்பில், முதலிடத்தில் இருந்து, ஆறாவது இடத்திற்கு வந்துள்ளது. நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு காரணம், நோயாளிகளை கண்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளித்தனர். அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்களை, வீடுகளுக்கே சென்று வழங்கினர்.தகவல் தொழில்நுட்பத்தை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அருண் தம்புராஜ் சரியாக பயன்படுத்தினார். சுகாதார பணியாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று, நோய் அறிகுறி உள்ளதா என, கண்டறிந்தனர்.

ஆரம்ப நிலையில் கவனம் செலுத்தி, மருத்துவ பரிசோதனைகளை அதிகப்படுத்தி, நோய் அறிகுறி இருந்தவர்களைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.எந்த பேரிடராக இருந்தாலும், அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். முதலில் பேரிடரை எதிர்கொள்ள, மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.இந்த பேரிடரிலிருந்து வெளியில் வர, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அவசர நிலைகுறை சொல்வது, குழப்புவது அனைவருக்கும் எளிது. அதற்கு சவால் கிடையாது. எளிதாக சேற்றை வாரி இறைக்கலாம். அது, அறிவுப்பூர்வமான செயல் அல்ல. சேற்றை வாரி இறைப்பதால், மக்களுக்கு அச்சம் ஏற்படும்; நம்பிக்கை சிதைந்து போகும். இதை, நல் உள்ளம் படைத்தவர்கள் சிந்திக்க வேண்டும்.இன்று, பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. மருத்துவ நிபுணர்கள் குழு வழங்கும் அறிவுரையின்படி, முதல்வர் பிறப்பிக்கும் உத்தரவுகளை பின்பற்றி, மக்களை காப்பாற்றி வருகிறோம்.அனைவரும் இணைந்து, கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின், அரசியல் தொடர்பாக, விரிவான விவாதம் நடத்தலாம்; மக்களும் ஏற்றுக் கொள்வர்.

இப்போது, ஒவ்வொரு நாளும், கொரோனா வீரியம் அதிகரித்துள்ளது. இந்த சவாலை முறியடிக்க, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பணியில் உள்ளவர்களை கொச்சைப்படுத்தும் வகையில், அறிக்கை இருக்கக் கூடாது.இவ்வாறு, உதயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X