கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடை செய்த பிளாஸ்டிக் தயாரிப்பு அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீதான நடவடிக்கை குறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரியமும், சென்னை மாநகராட்சியும் அறிக்கை அளிக்க, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி ரூபின் கிளமெண்ட் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின், தென்மண்டல அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட, மக்கும் தன்மையுடைய, பிளாஸ்டிக் என்ற பெயரில், மக்காத பிளாஸ்டிக் பைகளை, பல நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இப்பைகளை, 'சிபெட்' நிறுவனத்தில் பரிசோதித்ததில், அவை மக்காத தன்மை உடையவையாக உள்ளன. எனவே, பிளாஸ்டிக் தடை அரசாணையின்படி, மக்காத பிளாஸ்டிக் பைகளை, தொடர்ந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.வேதியியல் பொறியாளர்கள், நிபுணர்கள் கொண்ட குழுவை அமைத்து, செயல் திட்டத்தை உருவாக்கவும், அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:மக்காத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த நிறுவனங்கள் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன; தவறு செய்தவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை எவ்வுளவு.மேலும் அரசாணையை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த, விரிவான அறிக்கையை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி சார்பில், இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X