கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாஜிஸ்திரேட்டிடம் முறையான விசாரணை இல்லை: உயர்நீதி மன்றத்தில் முறையீடு

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சாத்தான்குளம் சம்பவத்தில், முறையாக விசாரிக்காமல், வணிகர்கள் இருவரையும் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாகவும், இது குறித்து, நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது:சாத்தான்குளத்தில், தந்தை, மகன் இருவரையும், போலீசார் கடுமையாக தாக்கி, வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, மாஜிஸ்திரேட்டும் முறையாக விசாரிக்காமல், சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. சட்டப்படி மாஜிஸ்திரேட் நடந்தாரா என்பதை, விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.இதையடுத்து, கோரிக்கை குறித்து, உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் மனு அளிக்கும்படியும், அதை பரிசீலிப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, பதிவாளர் ஜெனரலுக்கு, வழக்கறிஞர் சூரியபிரகாசம் கடிதம் அனுப்பி வைத்தார்.மாஜிஸ்திரேட் மீதுஐகோர்ட்டில் புகார்சாத்தான்குளம் சம்பவத்தில், முறையாக விசாரிக்காமல், வணிகர்கள் இருவரையும் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதாகவும், இது குறித்து, நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது

.உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று வழக்கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி கூறியதாவது:சாத்தான்குளத்தில், தந்தை, மகன் இருவரையும், போலீசார் கடுமையாக தாக்கி, வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, மாஜிஸ்திரேட்டும் முறையாக விசாரிக்காமல், சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. சட்டப்படி மாஜிஸ்திரேட் நடந்தாரா என்பதை, விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, கோரிக்கை குறித்து, உயர் நீதிமன்ற பதிவுத்துறையிடம் மனு அளிக்கும்படியும், அதை பரிசீலிப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, பதிவாளர் ஜெனரலுக்கு, வழக்கறிஞர் சூரியபிரகாசம் கடிதம் அனுப்பி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
25-ஜூன்-202020:00:28 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN நீதித்துறையின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. குற்றவாளிக்கு பரிந்து பேசும் மனங்கள் நாட்டில் நிறைந்து விட்டதால் குற்றங்கள் குறையவில்லை. சட்டத்தை மதித்து நடப்பவனே நல் மனிதன். நாட்டின் நல்குடிமகன் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X