அரசியல் செய்தி

தமிழ்நாடு

இறந்த வியாபாரிகள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை; துாத்துக்குடி மாவட்டத்தில், நீதிமன்ற காவலில் இறந்த, வியாபாரிகளின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு வேலை வழங்கவும், முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்

.அவரது அறிக்கை: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் போலீஸ் நிலைய காவலர்கள், 19ம் தேதி, சாத்தான்குளம் கடை வீதியில், ரோந்து சென்றனர். அப்போது, ஜெயராஜ், 58, என்பவர், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, மொபைல் போன் கடையை திறந்து வைத்திருந்தார்.கடையின் முன், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ், 31, மற்றும் சிலர் கூட்டமாக நின்றுள்ளனர்.

போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதும், மற்றவர்கள் கலைந்து சென்றனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், கடையை மூட மறுத்துள்ளனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். மறுநாள் காலை, சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.கடந்த, 22ம் தேதி இரவு, 7:35 மணிக்கு, பென்னிக்சிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, இரவு, 9:00 மணிக்கு இறந்தார்.மறுநாள் அதிகாலை, பென்னிக்சின் தந்தை ஜெயராஜ், உடல்நல குறைவு காரணமாக, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்; அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இது தொடர்பாக, சாத்தான்குளம் போலீஸ் சப் -- இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மற்றும் இரண்டு ஏட்டுகள், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும், நீதித்துறை நடுவர் அறிக்கையின்படியும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பிக்க உள்ள, உத்தரவின் அடிப்படையிலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இறந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், அவர்கள் குடும்பத்தில், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதிக்கேற்ப ஒருவருக்கு, அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டு உள்ளேன்.இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.போலி, 'இ - பாஸ்' தயாரித்த 5 பேர் கைது

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mayan balraj - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஜூன்-202023:14:05 IST Report Abuse
mayan balraj First government has to terminate the service of all the police men in that particular police station.They are not human beings.Even animals will show mercy on their enemies.All the police men in that particular station are responsible for this crime,Because all together did the crime.Why no one from that station not taken any action to prevent the crime.In india there is no respect for human lives.where is Law and order.law and order is only to save the goverment officials.This incident is not the first one.we saw so many custodial deaths in india.what action government took? and what acton our judicial tem did?it is a big shame. shows mercy on human beings.In india there is no respect for human lives.not only government officials even judicial tem also helping this rouges.
Rate this:
Cancel
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
25-ஜூன்-202007:47:09 IST Report Abuse
Ramachandran Rajagopal மக்களைக் கொள்ளும் காவல் துறையினருக்கு நீதித் துறையில் உள்ளவர்களில் பலர் உதவி செய்து அவர்களை தப்பிக்கவிடுவதால் துணிந்து கொள்கின்றனர்.இப்படிப்பட்டவர்களை பாதுகாக்கவே அரசாங்கம் இருக்கிறது.அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எல்லாம் இவர்களை பொறுத்தவரையில் செல்லத்தக்கது அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X