பொது செய்தி

தமிழ்நாடு

மின் சாதன பழுதை சரிசெய்ய கூடுதல் ஊழியர்கள் அவசியம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை, விரைந்து சரிசெய்வதற்கு, ஊரடங்கு இல்லாத பகுதிகளில் உள்ள ஊழியர்களை, வாகன வசதி ஏற்படுத்தி அழைத்து வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், துணைமின் நிலையங்களுக்கு வரும் மின்சாரத்தை, டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி, மின் கம்பம், 'கேபிள்' உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் வினியோகம் செய்கிறது. அந்த சாதனங்களில் பழுது ஏற்படும் போது, மின் தடை ஏற்படுகிறது.இதனால், மின் சாதன பழுதுகளை சரி செய்யும் பணியில், 24 மணி நேரமும் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

வைரஸ் பரவலை தடுக்க, சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சில பகுதிகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மின் வாரிய ஊழியர்களும், குறைந்தளவில் பணிக்கு வருகின்றனர்.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ர மணியன் கூறியதாவது:சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள வாரிய அலுவலகங்களுக்கு, விழுப்புரம், திருவண்ணாமலை உட்பட, பிற மாவட்டங்களில் இருந்து, தினமும் ஊழியர்கள் அலுவலகம் வந்து செல்கின்றனர்.

பொது போக்குவரத்து சேவை இல்லாததால், சென்னை உட்பட முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளுக்கு, அவர்கள் வேலைக்கு வரசிரமமாக உள்ளது. தற்போது, ஊரடங்கு பகுதிகளில், குறைந்த ஊழியர்கள் பணியில் இருப்பதால், மின் சாதனங்களில் பழுது ஏற்படும் போது, சரிசெய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அவர்களுக்கும், அதிக பணிச்சுமை ஏற்படுகிறது. எனவே, வாகன வசதி ஏற்படுத்தி, ஊரடங்கு இல்லாத பகுதிகளில் இருந்து, ஊழியர்களை அழைத்து வந்து, ஊரடங்கு பகுதிகளில் பணியில் ஈடுபடுத்த, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X