அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் சேலம் பயணம்

Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 முதல்வர் சேலம் பயணம்

சென்னை; முதல்வர் இ.பி.எஸ்., சேலம் புறப்பட்டு சென்றார். வரும், 28ம் தேதி, சென்னை திரும்ப உள்ளார்.முதல்வர் இ.பி.எஸ்.,பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, நேற்று மாலை, சென்னையில் இருந்து, காரில் சேலம் புறப்பட்டு சென்றார்;

இரவு அங்கு தங்குகிறார்.இன்று காலை, கோவை செல்கிறார். அங்கு காலை, 10:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும், ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மதியம் சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.மாலை, ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகாவில் உள்ள, திருவாச்சி கிராமத்தில், அத்திக்கடவு -- அவினாசி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார்.

இரவு சேலம் திரும்புகிறார்.நாளை காலை, முதல்வர் திருச்சி செல்கிறார். அங்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.மாலை முக்கொம்பில் நடந்து வரும், கதவணை பணிகளை ஆய்வு செய்கிறார். இரவு சேலம் திரும்புகிறார். மீண்டும், 28ம் தேதி மதியம், சேலத்திலிருந்து புறப்பட்டு, சாலை மார்க்கமாக சென்னை திரும்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
25-ஜூன்-202011:21:39 IST Report Abuse
R. Vidya Sagar தேவையில்லாத பயணங்களை தவிர்த்தல் நன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X