பொது செய்தி

தமிழ்நாடு

சாலை டெண்டரை ஒத்தி வைக்க கோரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; 'நெடுஞ்சாலை துறை சார்பில், சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊரக சாலைகள் அமைக்க, டெண்டர் கோரப்படுவதை ஒத்திவைக்க வேண்டும்' என, அகில இந்திய கட்டுனர் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத் தலைவர் பிரகாஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கடந்த, 2019 ஆகஸ்டில், நெடுஞ்சாலை துறையில், சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊரக சாலைகள் திட்டப் பணிகளுக்கு, 'டெண்டர்' கோரப்பட்டது. பணிகள் நடந்து வந்த நிலையில், மார்ச், 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன்பின், கட்டுமான பணிகளை துவக்கலாம் என, அரசு அறிவித்தது. பணி செய்ய, ஆட்கள் முன்வரவில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விட்டனர்.ஜல்லி வகையறாக்கள், கம்பி, சிமென்ட் விலையேற்றம், பணிக்கு ஆட்கள் வர, அனுமதி சீட்டு கிடைக்காதது போன்றவற்றால், பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மே, 1ல் இருந்து, வேலை நடக்கிறது. கடந்த ஆண்டு எடுத்த வேலைகளில், பாதி அளவு கூட வேலை முடியவில்லை. செய்து முடித்த பணிகளுக்கு, மார்ச் முதல், பணம் பட்டுவாடா ஆகவில்லை.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், தொடர்ந்து முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

தேவையான தார், சென்னையில் இருந்து தான் வர வேண்டும். தார் சப்ளை இல்லாததால், பணிகள் அனைத்தும் நடக்கவில்லை.இந்த சூழ்நிலையில், மீண்டும் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மற்றும் ஊரக சாலைகள் அமைக்கும் பணிக்கு, டெண்டர் கோரப்பட உள்ளது. இதை அடுத்து, மூன்று மாதங்கள் அல்லது சுமுகமான சூழ்நிலை திரும்பும் வரை ஒத்திவைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X