எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மாவட்டங்களில் தொடருது கொரோனா பாதிப்பு 'கோட்டை' விடாமல் மக்களை காக்குமா அரசு?

Updated : ஜூன் 24, 2020 | Added : ஜூன் 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, சென்னையில் கோட்டை விட்டது போல அல்லாமல், இரும்புக்கரம் கொண்டு, மாவட்டங்களில் தொற்று பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அதிகரித்து வரும் நோய் பரவல்தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25ல் ஊரடங்கு அமலானது. ஆனால், ஊரடங்கு
மாவட்டங்களில் தொடருது கொரோனா பாதிப்பு 'கோட்டை' விடாமல் மக்களை காக்குமா அரசு?

சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, சென்னையில் கோட்டை விட்டது போல அல்லாமல், இரும்புக்கரம் கொண்டு, மாவட்டங்களில் தொற்று பரவலை தடுக்க, கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.


அதிகரித்து வரும் நோய் பரவல்தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, மார்ச், 25ல் ஊரடங்கு அமலானது. ஆனால், ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படவில்லை. கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டை மூட பலரும் வலியுறுத்தியும், மக்களுக்கு காய்கறி வேண்டும் எனக்கூறி, அரசு காலம் தாழ்த்தியது.
இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணமானது. பலசரக்கு கடைக்காரர்கள் கேட்டுக் கொண்டனர் என, அவற்றுக்கும் அரசு அனுமதி கொடுத்தது.

பின், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், நோய் பரவல் அதிகரித்ததால், கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டன. இது, தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக உள்ளது.
சென்னையில் இருந்து வந்தோர் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்து வந்தோராலும், அனைத்து மாவட்டங்களிலும், நோய் பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளது.கலெக்டர்களுக்கு அதிகாரம்சென்னையில் கோட்டை விட்டது போல, மாவட்டங்களிலும் அரசு கோட்டை விட்டால், நிலைமை மோசமாகும் அபாயம் உள்ளது.காய்கறி மார்க்கெட், சந்தை மற்றும் கடைகளில், பொருட்கள் வாங்க செல்வோர், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. இது, நோய் பரவலுக்கு முக்கிய காரணம்.
அதேபோல, நோய் அறிகுறி உள்ளவர்கள், பஸ்களில் பயணிப்பதால், பிறருக்கு நோய் பரவுகிறது. வாழ்வாதாரம் என்ற பெயரில், இவற்றை அனுமதிப்பது சிக்கலாகி விடுகிறது.
எனவே, அரசு இந்த பரமபத விளையாட்டை கைவிட்டு, நோயை கட்டுப்படுத்த, ஆரம்பத்திலேயே விதிமுறைகளை கடுமையாக்கி, இரும்புக்கரம் கொண்டு, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வீடு வீடாக சென்று, பரிசோதனை நடத்தி, பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும், 'மைக்ரோ லெவல்' சிகிச்சை முறையை, அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டும்.
கலெக்டர்களுக்கு முழு அதிகாரம் அளிக்க வேண்டும்; தேவைப்பட்டால், பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பெயரளவில் இல்லாமல், முறையாக செயல்படுத்த வேண்டும்.

ஆரம்பத்திலேயே நோய் பரவலை தடுத்தால் தான், மக்கள் நிம்மதியாக வாழ முடியும். ஊரடங்கால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும். அரசு சிறப்பு கவனம் செலுத்துவது, அவசர தேவை.


'அறிவியல் ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும்'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:

* ஒருவருக்கு காய்ச்சலோ, தொண்டை வலியோ ஏற்பட்டு, பரிசோதனைக்கு வந்தால், அடுத்த நிமிடமே, அவரையும், அவரது குடும்பத்தினரையும், முதலில் தனிமைப்படுத்த வேண்டும். பின், முந்தைய, 10 நாட்களில், யாருடன் எல்லாம், அவர் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து, அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்.

* பல மாவட்டங்களில், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுகின்றனர். பாதித்தோருடன் தொடர்பில் இருந்தவர்களை, தனிமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இதுவே, பாதிப்பு அதிகரிக்க காரணம். அவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும்; அறிகுறி இருந்தால் தான் பரிசோதனை என்றில்லாமல், அனைவருக்கும் உடனுக்குடன் பரிசோதனைகளை செய்ய வேண்டும்.

*தனிமைப்படுத்தப்பட்டோரின் மொபைல்போன் எண்களை சேகரிக்க வேண்டும். அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, கொரோனா அறிகுறிகள் உள்ளதா என்று விசாரிக்க வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்தால், 90 சதவீதம் கொரோனா பாதிப்பை தடுக்கலாம்.


*
அதிகம் பாதிப்புள்ள இடங்களில், வீடு வீடாகச் சென்று, யாருக்கெல்லாம் காய்ச்சல், சளி, மூச்சுதிணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருக்கிறது என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்

.

* பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி, முதற்கட்ட சிகிச்சைகளை வழங்க வேண்டும். எனவே, மாவட்ட நிர்வாகங்கள், கொரோனா பாதித்தவர்கள் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிவதில், முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

* இவ்வாறு, அறிவியல் ரீதியாக செயல்படாவிட்டால், கொரோனா நம்முடன் விளையாட ஆரம்பித்து விடும். அதைக் கட்டுப்படுத்துவது கடினம்.இவ்வாறு, அவர் கூறினார்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
25-ஜூன்-202009:29:45 IST Report Abuse
RajanRajan அம்மாவழி கோட்டை கட்டி மக்களை வழக்கம் போல் பாதுகாப்பாங்களோ என்னவோ. அம்மா அம்மா
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
25-ஜூன்-202009:12:06 IST Report Abuse
ravi சோதனை அதிகப்படுத்துவதற்கு பதில் தடுப்பு மருந்துகளை கொடுக்கலாம் - ஹோமியோபதி மாத்திரைகள் மக்களின் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது - இதை செய்யலாம் -
Rate this:
Cancel
25-ஜூன்-202005:59:30 IST Report Abuse
ஆப்பு அரசால் முடிந்ததை மட்டுமே செய்ய முடியும். இப்ப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஊரடங்கு போட்டு ரவுண்டு கட்டி அடிச்சு மக்களை முடக்கி, பொருளாதாரத்தையும் முடக்கியாச்சு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X