கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி புகார் விசாரிக்க நடுவரை நியமிக்க வழக்கு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அமைப்பின், நடுவர் பதவியை நிரப்ப கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, வி.அன்பழகன் என்பவர் தாக்கல் செய்த மனு:உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க, ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதன் நடுவராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோ.அய்யர், மார்ச்சில் ஓய்வு பெற்று விட்டார்.

தற்போது, அந்தப் பதவி காலியாக உள்ளது. எனவே, நடுவர் பதவிக்கு, தகுந்த அதிகாரியை நியமிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, இரண்டு வாரங்களில் பதில் அளிக்க, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X