பொது செய்தி

தமிழ்நாடு

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; 'ஏழு மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:பருவக்காற்று மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, வேலுார், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில், இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையிலும், இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா கடற்பகுதி மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில், பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் வரும், 28ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், செய்யூர், 8; அரக்கோணம், மதுராந்தகம், ஆம்பூர், 5; காவேரிப்பாக்கம், செஞ்சி, சோளிங்கர், பூந்தமல்லி, திருப்பத்துார், புதுச்சேரி, 3 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X