பொது செய்தி

தமிழ்நாடு

டீசல் விலை 40 காசு உயர்வு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், தொடர்ந்து, 16 நாட்களாக அதிகரித்து வந்த பெட்ரோல் விலை, நேற்று உயர்த்தப்படவில்லைபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட, மார்ச் இறுதிக்கு பின், இம்மாதம், 7ம் தேதி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின.அன்று, தமிழகத்தில், லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும்; டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது.\
அதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, தினமும், 40 காசுகள் முதல், 50 காசுகள் வரை உயர்த்தப்பட்டு வந்தது.நேற்று முன்தினம், லிட்டர் பெட்ரோல், 83.04 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல், 76.77 ரூபாயாக இருந்தது. நேற்று, பெட்ரோல் விலை உயர்த்தப்படாத நிலையில், டீசல் விலை மட்டும், 40 காசுகள் உயர்ந்தது, 77.17 ரூபாய்க்கு விற்பனையானது.இதையடுத்து, 16 நாட்களுக்கு பின், பெட்ரோல் விலையில் மாறுதல் செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X