புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

Added : ஜூன் 24, 2020
Share
புதிய கட்டடங்களுக்கு பூமி பூஜை

சிவகாசி:சிவகாசி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.ஒரு கோடியே 16 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

அவர் கூறுகையில், ''தமிழகத்தில் 'லாக்கப் டெத்' அதிகமாக நடைபெறுவதாக ஸ்டாலின் கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. நாங்கள் நாகரீகமாக நடந்து கொள்கிறோம். தி.மு.க.,விடம் அது கிடையாது,'' என்றார். நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கட்சி நிர்வாகிகள் அசன்பதுருதீன், பொன்சக்திவேல், கருப்பசாமி,சுப்பிரமணியன், கருப்பசாமிபாண்டியன், கார்த்திக், சங்கர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X