அரசியல் செய்தி

தமிழ்நாடு

இளைஞர் காங்., நிர்வாகி நீக்கம்

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

சென்னை; தமிழக காங்கிரஸ் தலைமை பற்றிய, மொட்டை கடிதத்தை, சமூக வலைதளங்களில் பதிவிட்ட, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலர் பிரவீன்ராஜ் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஹசன் மவுலானா அறிக்கை:கட்சிக்கு களங்கம் கற்பிக்கிற வகையில், அவதுாறுகளை பரப்புகிற நோக்கத்தில், காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட கடிதம், காங்கிரஸ் கட்சியில் பலருக்கு, அஞ்சல் வழியாக அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை, பிரவீன்ராஜ், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். கட்சியை களங்கப்படுத்தும் முயற்சிக்கு, துணை போயிருக்கிறார். எனவே, பிரவீன்ராஜ், காங்கிரஸ் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X