தனுஷ்கோடி நெடுஞ்சாலை ரூ.5 கோடியில் விரிவாக்கம்| Dinamalar

தனுஷ்கோடி நெடுஞ்சாலை ரூ.5 கோடியில் விரிவாக்கம்

Added : ஜூன் 24, 2020 | |
ராமேஸ்வரம்; தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை, 5 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி நடக்கிறது.ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை, 70 கோடி ரூபாயில், புதிய தேசிய நெடுஞ்சாலை அமைத்து, 2017ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்நிலையில், 5 கோடி ரூபாயில், முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை, 5 கி.மீ.,க்கு சாலையின்
 தனுஷ்கோடி நெடுஞ்சாலை  ரூ.5 கோடியில் விரிவாக்கம்

ராமேஸ்வரம்; தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை, 5 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தும் பணி நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே, முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை, 70 கோடி ரூபாயில், புதிய தேசிய நெடுஞ்சாலை அமைத்து, 2017ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்நிலையில், 5 கோடி ரூபாயில், முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரை, 5 கி.மீ.,க்கு சாலையின் இருபுறம், தலா, 5 அடி அகலத்தில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது.இதற்காக நேற்று, தனுஷ்கோடி சாலையின் இருபுறமுள்ள செம்மண் கலந்த சாலையை அகற்றி, கற்கள் கொட்டி, தார் சாலை அமைக்கும் பணி துவங்கியது. 'இப்பணி இரு மாதம் வரை நடக்கும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X