பொது செய்தி

தமிழ்நாடு

முறையான, 'இ - பாஸ்' இல்லாமல் நுழைபவர்கள் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 முறையான, 'இ - பாஸ்' இல்லாமல் நுழைபவர்கள் கைது

ஓசூர்; தமிழகத்திலிருந்து, 'இ - பாஸ்' இல்லாமல், கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய முயற்சிப்பவர்களை, அம்மாநில போலீசார் கைது செய்ய துவங்கி உள்ளனர்.

தமிழகத்திலிருந்து, இ - பாஸ் அனுமதியுடன், கர்நாடக மாநிலம் செல்வோர், அம்மாநில எல்லையான அத்திப்பள்ளியில், தடுத்து நிறுத்தப்படுகின்றனர்.தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் இருந்து, இ - பாஸ் பெற்று வந்தால், 'தெர்மல் ஸ்கேனர்' செய்து, மூன்று நாள் கட்டாய தனிமையில் வைக்கின்றனர்.

கர்நாடகாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கிய நிலையில், தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அம்மாநில போலீசார், நேற்று முன்தினம் இரவு முதல், கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இ - பாஸ் கிடைக்காத பலரும், தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை இயக்கப்படும், அரசு டவுன் பஸ்களில் சென்று, அங்கிருந்து நடந்து, கர்நாடகாவுக்குள் நுழைய முயற்சி செய்கின்றனர். இவ்வாறு செல்வோரை, கர்நாடக போலீசார் கைது செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மட்டும், ஏழு பேரை கைது செய்து, அம்மாநில சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X