பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் பயணியர் அதிகரிப்பு

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement
 நீலகிரியில் பயணியர் அதிகரிப்பு

குன்னுார்; நீலகிரிக்கு அதிகளவில் பயணியர் வந்த வண்ணம் இருப்பதால், தொற்று ஏற்படுவதை தடுக்க, சோதனைச் சாவடிகளில் முழு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், 16 சோதனைச் சாவடிகளில், கெத்தை உள்ளிட்ட, நான்கு சோதனைச் சாவடிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பர்லியார், குஞ்சப்பனை உள்ளிட்ட சோதனைச் சாவடிகள் வழியாக, அதிகளவில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஆறு பேரை அழைத்து வரும் டாக்சியில், மூன்று பேர் கீழே இறங்கி நடந்து, பர்லியார் பஜார் சென்று நிற்கின்றனர்.

அங்குள்ள கூட்ட நெரிசல் காரணமாக, ஆதார் கார்டுகளை சோதனை செய்பவர்கள், இதை கவனிக்க தவறுகின்றனர்.இதனால், பசுமை வரி, 50 ரூபாயை வசூலித்த பின், மீண்டும் டாக்சியில், ஆறு பேரும் ஊட்டி வருகின்றனர்.இதேபோல, மாவட்டம் முழுதும் விதிமீறல் நடக்கிறது. இதனால், நோய் பரவல் ஏற்பட வாய்ப்புள்ளது. நீலகிரி கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் கூறுகையில், ''சோதனைச் சாவடிகளில், முழு கட்டுப்பாடு விதித்து, வாகனங்கள் கண்காணிக்கப்படும். அனைவருக்கும் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். 2வது சீசனுக்கு தயார்நீலகிரி மாவட்டத்தில், ஏப்., மே மாதங்களில், முதல் சீசனும்; செப்., முதல் நவ., வரை, இரண்டாவது சீசனும் நடக்கிறது. நடப்பாண்டில், கொரோனா காரணமாக, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

கோடை விழா, மலர் கண்காட்சி உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தற்போது, ஐந்தாவது முறை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, ஜூன், 30 வரை உள்ளது. இந்நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், இரண்டாவது சீசனுக்கான பணிகள் துவங்கி, முதல் கட்டமாக, 500 தொட்டிகளில் மண் நிரப்பும் பணி நடந்து வருகிறது. பூங்கா அதிகாரிகள் கூறுகையில், 'இன்னும் சில நாட்களில், நடவு பணியை துவங்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் சீசனுக்குள், கொரோனா சிக்கல் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X