சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி டிரைவர் கொலை தாய், மனைவி, மகன் கைது

Added : ஜூன் 24, 2020
Share
Advertisement

பெரம்பலுார்; மது அருந்தி தகராறு செய்த டிரைவரை கட்டிப் போட்டு, காதில் விஷம் ஊற்றி கொலை செய்த தாய், மனைவி, மகன் கைது செய்யப்பட்டனர்.

அரியலுார் மாவட்டம், இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 50; லாரி டிரைவர். குடிப் பழக்கம் கொண்ட இவர், தினமும் மது அருந்தி, குடும்பத்தாரிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவு, மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜசேகர், மனைவி, தாய், மகனிடம் தகராறு செய்துள்ளார்.ஆத்திரமடைந்த மனைவி சுகுணா, 40, மகன் ரவிவர்மன், 23, தாய் செல்வி, 70, ஆகியோர் சேர்ந்து, ராஜசேகரை கட்டிப் போட்டு, காதில் பூச்சி மருந்து ஊற்றி கொலை செய்தனர்.ஜெயங்கொண்டம் போலீசார், மூன்று பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X