பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 மதுரை, தேனியில் முழு ஊரடங்கு அமல்

மதுரை; மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. குறைந்தளவு வாகனங்களே இயங்கியதால், ரோடுகள் வெறிச்சோடின.

தேனியிலும் நேற்று மாலை முதல், ஊரடங்கு அமலுக்கு வந்தது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றிய பகுதிகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு காய்கறி, மளிகை கடைகளை தவிர பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.

நேற்று முகூர்த்த நாள் என்பதால், மகால் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூடினர்.அதிகாரிகளும் அவர்களை ஒழுங்குபடுத்தவில்லை. அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், மாவட்ட நிர்வாகத்தின் தடையை மீறி, இறைச்சி விற்பனை நடந்தது. போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், நகரில் குறைந்தளவு வாகனங்கள் மட்டும் இயங்கின. அரசு அலுவலகங்கள், குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கின.கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் அதிகாரிகள், ஊரடங்கு பகுதிகளை ஆய்வு செய்தனர்.குவிந்த மக்கள்கொரோனாவை தடுக்க, தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏற்கனவே முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில், தேனி,போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் உள்ளிட்ட மற்ற நகராட்சிகளிலும், நேற்று மாலை, 6:00 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.தினமும் மதியம், 2:00 மணி வரை, 32 வகையான கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.எனினும், மளிகை பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என மக்கள் கருதினர்.

இதையடுத்து, நேற்று காலை முதல், தேனி கடைகளில் சுற்றுப்பகுதியினர் குவிந்தனர். ஒவ்வொரு கடை முன்பும் ஏராளமானோர் முண்டியடித்து, மொத்தமாக பொருட்களை வாங்கி சென்றனர்.இதனால், முக்கிய வீதிகளில், கூட்டம் அலைமோதியது. முக கவசம், சமூக இடைவெளியின்றி, மக்கள் சகஜமாக காணப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X