பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக - கேரள எல்லையில் நடந்த எளிய திருமணங்கள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 தமிழக - கேரள எல்லையில் நடந்த எளிய திருமணங்கள்

மூணாறு; கேரளாவைச் சேர்ந்த மூன்று மணப்பெண்களை, தமிழக மணமகன்கள், எல்லையில் நேற்று திருமணம் செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த சுகன்யா, வேதமணி, கஸ்துாரி ஆகிய இளம்பெண்களுக்கு, முறையே, மணிகண்டன், முத்தப்பராஜ், நிர்மல்ராஜ் ஆகிய தமிழக வாலிபர்களுடன், திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. கொரோனாவால் திருமணம் தாமதமானது.இந்நிலையில், கேரள- - தமிழக எல்லையான, சின்னாரில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சின்னார் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றபோதும் இரு மாநிலங்களிலும், மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்றனர்.

இதையடுத்து நேற்று, சின்னாரில் கேரள சுகாதாரத் துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில், மூன்று ஜோடிகளின் திருமணங்கள் நடந்தன.திருமணத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. பின், புதுமண ஜோடிகள் மட்டும் தமிழகம் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X