சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்னல் தாக்கியதில் 2 மாணவர்கள் பலி

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ஸ்ரீமுஷ்ணம்; கிரிக்கெட் விளையாடியதை வேடிக்கை பார்த்த மாணவர்கள் இருவர் மீது, மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்தனர்.

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்தவர்கள் பிரவீன்குமார், 16; 10ம் வகுப்பு படித்து வந்தார். ராம்குமார், 17; பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நண்பர்களான இருவரும், நேற்று மாலை கிரிக்கெட் விளையாட்டு நடக்கும் நகரப்பாடியார் திடலுக்கு சென்று, வேடிக்கை பார்த்தனர்.அப்போது, மேகங்கள் சூழ்ந்து இடியுடன் மழை பெய்தது.

திடீரென பிரவீன்குமார், ராம்குமாரை மின்னல் தாக்கியது. இருவரும் உடல் கருகி இறந்தனர். வாலிபர்கள் பலி விழுப்புரம் மாவட்டம், டி.புதுப்பாளையம் காலனியைச் சேர்ந்தவர், அஜித்குமார், 23; கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை, விவசாய பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இடியுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கி, அஜித்குமார் இறந்தார். அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், 25. இவர் நேற்று மாலை, விவசாய பணியில் இருந்தபோது, மின்னல் தாக்கி இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X