பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துாரில் இளநீர் ரூ.80

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 முதுகுளத்துாரில் இளநீர் ரூ.80

முதுகுளத்துார்:முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்ட், காந்தி சிலை, அரசு மருத்துவமனை, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அருகே விற்பனைக்காக இளநீர் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. வியாபாரி கூறியதாவது: பொள்ளாச்சியில் இருந்து முதுகுளத்துாருக்கு இளநீர் தருவிக்கப்பட்டு விற்கப்படுகிறது. மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள இளநீர் குடிப்பதால் அதிகமாகவே விற்பனையாகிறது.

கடந்த ஆண்டை விட தற்போது இளநீர் விலை அதிகரித்தாலும் வியாபாரம் குறையவில்லை. செவ்இளநீர் 60-80 ரூபாய்க்கும், பச்சை இளநீர் 50-60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X