கவனிக்கப்படாத ஆழ்துளை குழாய்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

பரமக்குடி:பரமக்குடி நகராட்சியில் அதிகாரிகள் கவனிப்பின்றி ஆழ்துளை கிணறுகள் வீணாகி வருகின்றன.பரமக்குடி நகராட்சியில்36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட சிறிய மின்மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.தொடர்ச்சியாக ஆரம்ப காலங்களில் அமைக்கப்பட்ட கை விசைப் பம்புகள் பலவும் வீணாக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட ஆழ் குழாய்களில் தண்ணீர் இன்றி ஒரு சில வீண் ஆனாலும், பல இடங்களில் மோட்டார் பழுது ஆகியுள்ளதால் தண்ணீர் எடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

தற்பொழுதும் பல பகுதிகளில் ஆழ்குழாய்கள் அமைக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளன. தொடர்ந்து மக்களின் தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கும் விதமாக இதுபோன்ற குழாய்களை அமைப்பதும், பின்னர் கவனிப்பாரற்று கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது.ஆகவே நகரில் தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் விதமாக அனைத்து பகுதி ஆழ் குழாய்களை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X