முழு ஊரடங்கு: மதுரை போல ராமநாதபுரத்திற்கும் வேண்டும்:நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று| Dinamalar

தமிழ்நாடு

முழு ஊரடங்கு: மதுரை போல ராமநாதபுரத்திற்கும் வேண்டும்:நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று

Added : ஜூன் 25, 2020
Share
 முழு ஊரடங்கு: மதுரை போல ராமநாதபுரத்திற்கும் வேண்டும்:நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ராமநாதபுரம் :ராமநாதபுரம்மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவலின் வேகம அதிகரித்து உள்ளதால் சென்னை மதுரை போன்று மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது தற்போதைய சூழ்நிலையில் அவசியம். மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் தொடக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களாக இரட்டை இலக்கத்தில் தொடர்கிறது. நேற்று முன்தினம் 32 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் மிக அதிக அளவாக 30 பெண்கள் உட்பட 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


காரணம் என்ன

பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆராய வேண்டும். மாவட்டத்தில் சமூகத் தொற்றாக மாறாமல் இருக்க மதுரை, சென்னையைப் போல மேலும் ஒரு முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். அப்போது தான் கொரோனா கோரப்பிடியில் இருந்து தப்பிக்க முடியும்.மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோர் அதிகரித்துள்ளனர்.

பல வர்த்தக நிறுவனங்களில் சானிடைசர் பயன்படுத்தாத நிலை தொடர்கிறது. மேலும் வங்கிகள், ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காத நிலை தொடர்கிறது.அரசு டவுன் பஸ்களில் சமூக இடைவெளியின்றி நெரிசலாக உள்ளது.இது போன்ற காரணங்களால் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மாவட்டங்களுக்குள்ளும் போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வருவோரை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இ--பாஸ் வழங்குவதை நிறுத்தலாம். மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நடவடிக்கைகளில் விரைந்து செயல்படுவதோடு மீண்டும் ஒரு முழு ஊரடங்கை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல் படுத்துவது ஒன்றே கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் வழி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X