பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை வேளாண் பொருட்களைசந்தைப்படுத்த அங்ககச்சான்று 

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் உதவி இயக்குனர் சக்திகணேஷ் கூறியதாவது: இயற்கை வழி மேலாண்மையில் விளைவிக்கப்படும் பொருட்களை விவசாயிகள் தனித்துவத்துடன் சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்வதை ஊக்கப்படுத்த அங்ககச்சான்று வழங்கப்படுகிறது.

இயற்கை வழி வேளாண் சாகுபடி விவசாயிகள், தனிநபராகவோ, குழுவாக பதிவு செய்யலாம். விளைப்பொருட்களை வணிகம், ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் பதிவு செய்யவேண்டும். அங்ககச்சான்று பெற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து,பண்ணையின் விபரங்கள், வரைபடம், பயிர் திட்டம்,மண், பாசனநீர் பரிசோதனை ஆகிய விபரங்களுடன், சான்றுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.2,700, பிற விவசாயிகளுக்கு ரூ.3,200, குழுப்பதிவிற்கு ரூ.7,200 மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,400 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு உழவர் மையம், ஒழுங்குமுறை விற்பனை கூடவளாகம், மாவட்ட விதைச்சான்று, அங்ககச்சான்று அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X