சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தஞ்சம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமேஸ்வரம்:சூறாவளி காற்றில் திசை மாறி தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 5 பேர், பாம்பன் கரையில் தஞ்சமடைந்தனர்.

ஜூன் 22ல் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப் பட்டினம் கீழத்தோட்டம் மீனவ கிராமத்தில் இருந்து நாட்டுப்படகில் மீனவர்கள் நாகூரான், விக்னேஷ், சுவாமிநாதன், முனியாண்டி, பாண்டியன் 5 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்த போது, திடீரென வீசிய சூறாவளி யால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதில், படகு திசை மாறி ஜூன் 23ல் பாம்பன் கடல் பகுதிக்கு இழுத்து வரப்பட்டது.

பாம்பன் கரையில் தஞ்சம் புகுந்த மீனவர் களை, இப்பகுதி மீன வர்கள் உணவு வழங்கி உபசரித்தனர்.பாம்பன் சமூக ஆர்வலர்கள் ஜிம்மிகார்டர், பிரசன்னா ஏற்பாட்டில் தஞ்சை மீனவர்கள் சொந்த ஊருக்கு செல்ல படகிற்கு டீசல், உணவு பொருள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X