பாதாள சாக்கடை பராமரிப்பில் அலட்சியம் ; வீடுகளுக்கு நோட்டீஸ்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சியில் பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால், நகரில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ரோட்டில் செல்கிறது.

இதனை தவிர்க்க வீட்டு இணைப்புகளில் பாதாள சாக்கடையில் குப்பை செல்லாத வகையில் வலையமைக்க வேண்டும், மழைநீர் செல்ல கட்டமைப்பு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியது.நகராட்சி கமிஷனர் விஸ்வநாதன் கூறுகையில், 'பாதாள சாக்கடையை பராமரிக்காத வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.தேவையற்ற குப்பை குழாயில் செல்லாத வகையில் வலையமைக்க வேண்டும். இல்லையெனில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X