பயிர்காப்பீடுதரவில்லை: விவசாயிகள் குமுறல்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் பயிர்காப்பீடுத் தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாக புலம்புகின்றனர்.

ஆஸ்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கூடலுார், கருங்குடி பகுதியைச் சேர்ந்த 5 ஏக்கருக்கும் மேல் வைத்துஉள்ள விவசாயிகள் 2018--19ல் பயிர்காப்பீடு செய்துஉள்ளனர். அப்போது வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதற்குரிய பயிர் காப்பீட்டுத்தொகை வழங்காமல் ஒரு ஆண்டாக அதிகாரிகள் இழுத்தடிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் கூறுகையில், '5 ஏக்கர் முதல் 15 ஏக்கர்வரை பயிர்காப்பீடு செய்துஉள்ளோம். 194 விவசாயிகளுக்கு தலா ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வர வேண்டியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். காப்பீட்டுதொகையை வழங்க கலெக்டர் வீரராகவ ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X