தண்ணீர் தட்டுப்பாடு கால்நடைகள் விற்பனை| Dinamalar

தண்ணீர் தட்டுப்பாடு கால்நடைகள் விற்பனை

Added : ஜூன் 25, 2020
Share

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலத்தில் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் மேய்ச்சல் நிலம் இன்றி சிரமப்படுகின்றனர்.

மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியால்வயல்கள் அனைத்தும் வறண்ட நிலையில் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு தேவையான புற்கள் இன்றி, உணவுக்காகஅலைந்து திரியும் பரிதாப நிலையில் உள்ளன. கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டு உள்ளதால், கால்நடைகளுக்கு குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கால்நடைகளை பல கி.மீ., துாரம் ஓட்டி சென்று ஆழ்துளை கிணறு உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் காட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, சோழந்துார், உப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகளை விவசாயிகள்குறைந்த விலைக்கு விற்பனை செய்துவரும் நிலையும் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X