ராமநாதபுரம் மார்க்கெட்டில் காற்றில் பறக்கும் கட்டுப்பாடு: கொரோனா பரவும் அபாயம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரண்மனைத்தெரு மார்க்கெட் பகுதியில் முகக்கவசம், கையுறை அணியாமல் விற்பனையில் வியாபாரிகள் ஈடுபடுகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 20 முதல் 50பேர் வரை கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். நேற்று ஒரே நாளில் 57பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்த எண்ணிக்கை 398 ஆக உள்ளது. இதுவரை 7 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இந்த நிலையிலும் அலட்சியத்தால் கொரானா தடுப்பு விதிமுறையை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமல் மக்கள் வெளியே வருகின்றனர்.

அரண்மனைத்தெருவில் காய்கறி, பழங்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்கப்படுகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பகுதியில் வியாபாரிகள், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக்கவசம், கையுறை அணியாமல் பாதுகாப்பற்ற நிலை காணப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X