பெரியாறு பாசன கடைமடை கண்மாயில்தண்ணீர் திறந்து 20 ஆண்டுகளாகிறது: விவசாயிகள் வேதனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 பெரியாறு பாசன கடைமடை கண்மாயில்தண்ணீர் திறந்து 20 ஆண்டுகளாகிறது: விவசாயிகள் வேதனை

சிவகங்கை:சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன கால்வாயில் கடைமடைப்பகுதியான சாக்கம்மா கண்மாயில் மடை திறந்து20 ஆண்டுகளாகிறது. இப்பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

சிவகங்கை ஒன்றியம்கண்டாங்கிப்பட்டி ஊராட்சியில் உள்ள பெரியாறு பாசன கால்வாய் கடைமடை கண்மாய் ஆகும். 140 ஏக்கர் கொண்ட கண்மாயில் தண்ணீர் தேக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த கண்மாய் பகுதிக்கு வரத்துக்கால்வாய் முழுவதும் துார்ந்து போய் சீமைக்கருவேல மரங்கள்ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

கண்மாயில் உள்ள மூன்று மடைகளும் திறந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் முட்புதர் மண்டியுள்ளது.இந்த கண்மாய் மூலம் சிவல்பட்டி, சாலுார், மே, கீழச்சாலுார், கொளுஞ்சிப்பட்டி, பாப்பாகுடி ஆகிய கிராமங்கள் பயன்பெறும். இப்பகுதியில் உள்ள நரிக்குளம், வேளரி, பொக்கிளி கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்கும்.

பொதுப்பணித்துறைஅதிகாரிகள் இது வரை கண்டு கொள்ளாதால் இப்பகுதியில் உள்ள 500 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பாப்பாகுடி விவசாயி அம்மாவாசி தெரிவித்த தாவது: இந்த கண்மாய் துார் வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்மாய் மடை திறந்து பாசனம் செய்யப்பட்டது. பெரியாறு பாசனத்தில் கடைமடை கண்மாய் என்பதால் கண்டு கொள்வதில்லை. மழை நேரங்களில் தேங்கும் தண்ணீரால் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் மட்டுமே உயரும். கால்நடைகளுக்கு குடிநீருக்காக பயன்படுகிறது. பாசன கால்வாய்கள், வரத்து கால்வாய்கள், மடைகள் பாழடைந்து பயன்படாது போனது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X