சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிளகாய் விவசாயம் கை கொடுக்கவில்லையே:ஏக்கத்தில் விவசாயிகள்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 மிளகாய் விவசாயம் கை கொடுக்கவில்லையே:ஏக்கத்தில் விவசாயிகள்

சிவகங்கை:சிவகங்கை பகுதியில் மிளகாய் விவசாயம் கை கொடுக்கவில்லையே என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர்.
சிவகங்கை ஒன்றியம் சக்கந்தி ஊராட்சியில் உலகநாதபுரம் பகுதியில் விவசாயிகள் மிளகாய் பயிரிட்டிருந்தனர். ஜன., மாதம் பயிரிடப்பட்ட மிளகாய் 4 மாதத்தில் காய்க்கும்பருவத்திற்கு வந்தது. 15 நாட்களுக்கு ஒரு முறை 4 முறை மிளகாய் எடுக்கும் பணி நடந்தது.இதில் போதுமான தண்ணீர் இல்லாததால் மிளகாய் காய்ப்பு அதிகம் இல்லை.

வழக்கமாக 8 மூடைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 4 மூடைகள் மட்டுமே கிடைத்தது. மிளகாய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை. கிலோ 8 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமேவிலை போனது. மிளகாயை வத்தலுக்காக பழுக்க விட்டுள்ளனர்.மிளகாய் பழமாக மாறுவதற்கு ஒன்றரை மாதங்கள் வரை ஆகும். இரு முறைதான் எடுக்க முடியும். மிளகாய் இந்தாண்டு கை கொடுக்கவில்லை என்ற வேதனையில் விவசாயிகள் உள்ளனர்.

தனசேகரன் விவசாயி கூறியதாவது:மிளகாய் பயிருக்கு போதிய தண்ணீர் இல்லை. மிளகாய் செடிகள் காய்ந்து கருகியது. விளைந்த வரை போதும், என விட்டு விட்டேன். விலையும் குறைவாக கிடைத்ததால் வேறு வழியின்றி வத்தலுக்காக செடியில் பழுக்கவிட்டேன். முழுவதுமாக காய்ந்து கருகிவிட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X