பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் கண்ணதாசனின் 94வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடந்தவிழாவில் கண்ணதாசன் சிலைக்கு கலெக்டர் ஜெயகாந்தன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ., சுரேந்திரன், தமிழ் வளர்ச்சிதுறை துணை இயக்குநர் நாகராஜன்,தாசில்தார் பாலாஜி, கண்ணதாசன் மகள் விசாலாட்சி, டாக்டர். சுரேந்திரன், கவிஞர் அரு.நாகப்பன் மரியாதை செலுத்தினர்.

கண்ணதாசனின் சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில்மலையரசிஅம்மன் கோயிலில் வழிபாடு நடந்தது. பேரவைத் தலைவர் பழனியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.,சுப்புராம், அம்பலகாரர் வயிரவன் பங்கேற்றனர்.

* பாரதி இலக்கிய கழகம் மற்றும் நுாலக வாசகர் வட்டம் சார்பில் தலைவர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர் பழனியப்பன், பேராசிரியர் சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினர்.பா.ஜ., சார்பில் வக்கீல் முருகேசன், இந்து முன்னணி மணிகண்டன், கண்ணதாசன் உறவினர் அழகப்பன் மற்றும் சுற்று வட்டாரக் கிராமத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X