கொரோனாவால் இறந்தவரை அடக்கம்| Dinamalar

கொரோனாவால் இறந்தவரை அடக்கம்

Added : ஜூன் 25, 2020
Share

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் உயிர்இழப்போரின் உடலை அடக்கம் செய்வதற்கு சுகாதாரத்துறையினர் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

இங்கு, கொரோனா தொற்றுடன் ஜூன் 19ல்சிகிச்சையில் சேர்ந்த 47 வயது ஆண், நேற்று காலை 8:45 மணிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்லாமல், உறவினர்கள் சிவகங்கை, காஞ்சிரங்கால் மயானத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.நேற்று பகல் 12:00 மணிக்கு, சிவகங்கையில் உரிய பாதுகாப்புடன் இறந்தவர் உடலை ஆம்புலன்சில் எடுத்து சென்றனர்.

காஞ்சிரங்கால் மயானத்தில் இருந்த ஊழியர்கள், நகராட்சியில் அனுமதி கடிதம் பெற்று வந்தால் தான், அடக்கம் செய்ய முடியும் என தெரிவித்து விட்டனர்.இதனால், நேற்று பகல் 2:30 மணி வரை அனுமதி சான்று வழங்கவில்லை. மேலும், மானாமதுரை ரோட்டில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்யுமாறு வலியுறுத்தினர்.

தொடர்ந்து அலைக்கழிப்பு செய்ததால், இறந்தவரின் உறவினர்கள், அவரது உடலை சொந்த ஊருக்கே எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.சிவகங்கை மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறப்போரை எங்கு அடக்கம் செய்யலாம் என்பது குறித்த விபரங்களை மாவட்ட நிர்வாகம் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X