அரசு விடுதிகளில் ‛கொரோனா கேர் சென்டர்: சுகாதார துணை இயக்குனர் தகவல்| Dinamalar

அரசு விடுதிகளில் '‛கொரோனா கேர் சென்டர்': சுகாதார துணை இயக்குனர் தகவல்

Added : ஜூன் 25, 2020
Share

சிவகங்கை:''அரசு மாணவர்கள் விடுதிகளில் 'கொரோனா கேர் சென்டர்' அமைத்துள்ளோம்,'' என சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

சிவகங்கை அரசு மருத்துவமனையில் தொற்றுடன் மூச்சு திணறல் போன்ற பிரச்னையுடன் வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தொற்று உறுதியாகி, உடல்ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லாதவர்களை தனிமைப்படுத்த அமராவதிபுதுார் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு ஏற்படுத்தியுள்ளோம். மாவட்ட அளவில் உள்ள அரசு மாணவர்கள் விடுதிகளில் கொரோனா கேர் சென்டர் செயல்படுகிறது. அங்கும் தொற்றுடன் அதிக பாதிப்பு இல்லாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து தனிமையில் வைக்கப்படுவர்.

விடுதிகளில் ஓரளவிற்கு படுக்கை வசதிகள் உள்ளன.பற்றாக்குறைக்கு தேவையான படுக்கை வசதிகள் செய்யப்படும். இன்னும் நோயாளிகள்வருகை அதிகரித்தால், கல்லுாரிகளில் ஆக்சிஜன்வசதிகளை ஏற்படுத்தி, அங்கும் கூடுதல் படுக்கைகள் அமைத்து தொற்றுடன் வருவோரை தனிமையில் வைத்து கண்காணிக்க உள்ளோம், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X