சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புவனத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் 40 வருடமாக பஸ் ஸ்டாண்ட் இல்லை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 திருப்புவனத்தில் நிறுத்தப்பட்ட பஸ்கள் 40 வருடமாக பஸ் ஸ்டாண்ட் இல்லை

திருப்புவனம்:மதுரை மாவட்டத்தில்முழு ஊரடங்கு காரணமாக திருப்புவனத்துடன் பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் பஸ்கள் ரோட்டிலேயே வரிசையாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.தாலுகா தலைநகரமான திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதுதவிர திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மதுரை, பரமக்குடி, சிவகங்கை செல்ல திருப்புவனம் வந்து தான் செல்ல முடியும்.

தினசரி இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்லும் நிலையில் 40 வருடமாக பஸ் ஸ்டாண்ட் இல்லை.தற்போது திருப்புவனத்துடன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி செல்லும் அனைத்து பஸ்களும் ரோட்டிலேயே வரிசையாக நிறுத்தப்பட்டு வருகின்றன. கலெக்டர் முயற்சி எடுத்து திருப்புவனத்தில்பேருந்து நிலையம் அமைத்து கொடுத்தால் மக்களின் நீண்ட கால பிரச்சனை தீரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X