2 ஆயிரம் மாதிரிகளில் 31 பேருக்கு தொற்று திருப்புத்துாரில் குறைய நடவடிக்கை தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 ஆயிரம் மாதிரிகளில் 31 பேருக்கு தொற்று திருப்புத்துாரில் குறைய நடவடிக்கை தேவை

Added : ஜூன் 25, 2020
Share

திருப்புத்துார்:திருப்புத்துார் ஒன்றியத்தில் மார்ச் கடைசி வாரத்தில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.அன்றிலிருந்து சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று கொரோனா தொற்று அறிகுறியுள்ளவர்கள், வெளியூர் நபர்கள், கட்டுப்பாடு அறையில்இருந்து வந்த தகவல் அடிப்படையில் வந்தவர்களை தனிமைப்படுத்தி, மாதிரிகள் சேகரித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களில் இதுவரை 2 ஆயிரம் மாதிரிகள் சேகரித்ததில் 31 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சோதனை செய்யப்பட்டவர்களில் 1.5 சதவீதம் பேருக்கு தொற்றுள்ளது. அதில் தற்போது 6 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். நேற்று மட்டும் 108 மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கைக்கேற்ப தடுப்பு நடவடிக்கை இல்லை. தற்போது தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றுவது குறைந்து விட்டதும், நகரில் கிருமிநாசினி தெளிப்பு, கடைகளில் சமூக விலகல், மக்கள் முகக்கவசம் போன்றவை பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

தற்போது தொற்றுள்ளவர்களின் தொடர்பு அதிகரித்துள்ள நிலையில் மக்களிடம் கட்டுப்பாடுகளை ஏற்படுத்த வேண்டும். தெருக்களில் மீண்டும் கிருமிநாசினி தெளிப்பு அதிகரிக்க வேண்டும்.தொடர்ந்து கூடுதல் சுகதாரப் பணியாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோருடன் வீடுகளில் தகவல் சேகரிப்பதும், அறிகுறி உள்ளவர்களை அடையாளம் காண்பதும் முழுமையாக தொற்றை கட்டுப்படுத்துவதும் அவசியமாகும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X