பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் தொகுப்பு பொருட்கள்ஆர்வம் காட்டாத மக்களால் வீணாகிறது

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

காரைக்குடி:காரைக்குடியில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் தொகுப்பு பொருட்களை வாங்க, மக்கள் ஆர்வம் காட்டாததால் தேக்கம் அடைவதோடு எறும்புக்கும் இரையாகி வருகிறது.

காரைக்குடி தாலுகாவில்140 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு 19 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு ரூ.500க்கு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை அரசு அறிவித்தது.

கூட்டுறவுத்துறை மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, மிளகு, சீரகம்,கடுகு, வெந்தயம், புளி, பொரிகடலை, மஞ்சள்துாள், டீத்துாள் உட்பட 19 வகையான தொகுப்பு பொருட்கள் ரேஷன் கடைக்கு அனுப்பப்பட்டு, ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மளிகைக்கடைகள் உட்பட அனைத்துகடைகளும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தொகுப்பு பொருட்களின்விலையை விட மளிகைக்கடையில் குறைந்த விலைக்கே பொருட்கள் கிடைக்கிறது. இதனால், மக்கள்தொகுப்பு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதன் காரணமாக ரேஷன் கடைகளிலும் தொகுப்பு பொருட்கள் தேங்கி கிடப்பதோடு, எறும்புக்கும் இரையாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X