தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறிய குழு அமைப்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு| Dinamalar

தமிழ்நாடு

தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறிய குழு அமைப்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு

Added : ஜூன் 25, 2020
Share
  தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறிய குழு அமைப்பு  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு

மதுரை : மதுரை மாநகராட்சியில் தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் நாளுக்கு நாள் தொற்று அதிகரிக்கிறது. பாதித்தோருடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து சோதிப்பதில் சிக்கல் நிலவியது. இதை களைய அனைத்து வார்டுகளிலும் நான்கு உதவி வருவாய் அலுவலர்கள் தலைமையில் 20 கணக்காளர்கள், கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 100 வருவாய்
உதவியாளர்களை கொண்ட தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில், கொரோனா பாதித்தோர், அவருடன் தொடர்பில் இருந்தோரின் விவரங்களை சேகரிப்பர். பின் அருகேயுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்வர். பாதிப்பு உறுதியானால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுவர். இல்லையென்றால் ஒருவாரம் வீட்டுத் தனிமையை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுவர்.இதேபோன்று கொரோனா கண்டறியப்பட்ட வார்டுகளில் தொற்று பரவாமல் இருக்க, 4 சுகாதார அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மேற்பார்வையில் 150 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொற்று கண்டறியப்படும் பகுதி, தெருக்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்களில் காலை, மாலை கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்வர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X