தமிழ்நாடு

தவிப்பு : பொருள் ஒதுக்கீடு குறைவால் விற்பனையாளர்கள் :ரேஷன் கார்டுதாரர்களுடன் தொடருது பிரச்னை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

தேனி: தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் குறைவாக ஒதுக்கப்படுவதால் வி்ற்பனையளர்கள் தவிக்கின்றனர். இதனால் கார்டுதார்களுடன் தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.



கொரோனா ஊரடங்கால் மக்கள் நலன்கருதி மத்திய, மாநில அரசுகள் மூன்று மாதங்களாக 4 வகை திட்டங்களில் ரேஷன்கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் இலவசமாக வழங்குகிறது. மாவட்டத்தில் மொத்தம் 450 ரேஷன்கடைகளும், 4 லட்சத்து 18 ஆயிரம் கார்டுதாரர்களும் உள்ளனர். குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப 20 கிலோ முதல் 70 கிலோ வரை அரிசி, கோதுமை வழங்குகின்றனர். இது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால் இவை முழு ஒதுக்கீடாக வழங்குவது இல்லை. மாநில அரசு ஒதுக்கீட்டு அரிசியில் 82 சதவீதமும், பிற ஒதுக்கீட்டில் 10 சதவீத அரிசி குறைவாக வழங்குகின்றனர். அரிசி மூடை 50 கிலோ 650 கிராம், சர்க்கரை மூடை 50 கிலோ 500கிராம் எடையில் இருக்க வேண்டும். ஆனால் சரியான எடையில் கடைகளுக்கு வழங்குவதில்லை.

சப்ளை செய்யும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து ஒவ்வொரு மூடைக்கும் 2 கிலோ வரை குறைவாக வருகிறது என்ற புகார் வருகிறது. பொருட்கள் சப்ளை செய்யும் லாரிகளில் எடை இயந்திரம் இருப்பதும் இல்லை.

சுரண்டல்

இந்த எடைகுறைவை கடை விற்பனையாளர்கள் பொதுமக்கள் தலையில் சுமத்தி சமாளிக்கின்றனர். இலவச பொருட்கள் என்பதால் அனைத்து கார்டுதாரர்களும் தங்களுக்கு உரியவை வழங்க கோரி வருகின்றனர். ஆனால் ஒதுக்கீட்டில் குறைவு என்பதால் பொது மக்களை சமாளிப்பது தினமும் போராட்டமாக உள்ளது என பணியாளர்கள் குமுறுகின்றனர். அவர்களுடன் தினமும் வாக்குவாதம் ஏற்படுகிறது.


பொட்டலத்திலும் நஷ்டம்



ஊரடங்கில் வழங்க வேண்டிய ரூ.500 மதிப்பிலான பலசரக்கு தொகுப்பு இம் மாவட்டத்திற்கு தாமதமாகத் தான் வந்தது. இதை நகர் கடைகளுக்கு 80, கிராம கடைகளுக்கு 40 பெட்டிகள் வீதம் ஒதுக்கீடு செய்து பலசரக்கு விற்றுதர அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

பலசரக்கு தொகுப்பை பெற ஆர்வமில்லாதவர்களிடம் தனித்தனி பொட்டலங்களாக பிரித்து விற்கின்றனர். இதனால் ஒவ்வொரு விற்பனையாளருக்கு பெட்டிக்கு ரூ.150 இழப்பு ஏற்படுகிறது. இதுபோன்ற நெருக்கடியால் ரேஷன் கடைகளில் பிரச்னை நீடிக்கிறது. பொருட்களை நுாறு சதவீத ஒதுக்கீடு, எடை குறைவில்லாமல் வழங்கி மக்களுக்கு சென்றடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் கார்திகாயினி கூறுகையில், ''நுகர்பொருள் வாணிப கழக ஆணையர் ஒதுக்கீடு செய்யும் பொருட்களையே கடைகளுக்கு வழங்குகிறோம். பற்றாக்குறை இல்லை. அப்படி இருந்தால் அடுத்த மாத ஒதுக்கீட்டில் வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X