காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி;பொதுக்கழிப்பறை இல்லை தேனி நகராட்சி 28 வது வார்டு மக்கள் சிரமம்

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement
 காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி;பொதுக்கழிப்பறை இல்லை தேனி நகராட்சி 28 வது வார்டு மக்கள் சிரமம்

தேனி:காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி, பொதுக் கழிப்பறை இல்லை என பல்வேறு அடிப்படை வசதி குறைவால் தேனி அல்லிநகரம் நகராட்சி பாரஸ்ட் ரோடு மூன்றாவது தெரு மக்கள் பரிதவிக்கின்றனர்.

இந் நகராட்சி 28 வது வார்டில் பாரஸ்ட் ரோடு மூன்று தெருக்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதிக மக்கள்தொகை, குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். மூன்றாவது தெரு வாடகை குடியிருப்புகளில் பலவற்றில் கழிப்பறை வசதி இல்லாததால் மேற்கு பகுதியில் வனத்துறை வால் கரட்டினை திறந்த வெளியாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. பாதாள சாக்கடை உள்ளதால் பொதுக்கழிபறை அவசியம்.

வாரம் ஒருமுறை செய்யப்படும் குடிநீர் வினியோகத்தின் போது புதிய குழாய் இணைப்புகள் முறையாக பொருத்தாததால் ஒவ்வொரு இணைப்பிலும் குடிநீர் கசிவால் விரையமாகிறது. இட வசதி இன்றி அங்கன்வாடி வாடகை கட்டடத்தில் நீண்டகாலமாக இயங்குகிறது.

இத் தெருவில் கழிவுநீர் ஓடையில் குப்பையை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிலவுகிறது. பாரஸ்ட் ரோடு 7 தெரு கழிவு நீரும் ஒன்று சேர்ந்து ரயில்வே பாலம் வழியாக சென்று மதுரை ரோட்டில் மொத்தமாக தேங்குகிறது.

பொதுமக்கள் கூறுவது என்ன

பயனில்லை

எம். பாஸ்கரன்:பாரஸ்ட் ரோடு 3வது தெருவில் ஆழ்துளை குழாயில் நீரை உறிஞ்சி மேல்நிலை தொட்டியில் ஏற்றி தண்ணீர் பிடித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மோட்டார் பழுதானது. நகராட்சி தரப்பில்மோட்டாரை கழற்றி சென்றதால் மேல்நிலை தொட்டி பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. தற்போது 2வது தெருவில் இருந்து மூன்றாவது தெருவிற்கு குழாய் அமைத்துள்ளனர். ஆனால் இந்த தொட்டியை பயன்படுத்தினால் மக்கள் சிரமம் இன்றி தண்ணீர் பிடிப்பர். ஆழ்துளை குழாயை மேலும் சில அடி துாரம் ஆழப்படுத்திட வேண்டும். அதில் கிடைக்கும் நீரை மேல்நிலை தொட்டியில் ஏற்றி வினியோகிக்கலாம்.

சிக்கல்எம்.

ஈஸ்வரன்: குழாய் சீரமைப்பு பணி செய்வோர் பள்ளம் தோண்டி பணி முடித்த பின் பேவர் பிளாக் கற்களை முறையாக பதிக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் தெரு மேடு பள்ளங்களாக உள்ளன. தெருவில் கடைசி பகுதியில் ஓடையை கடந்து செல்ல பாலம் அகலமாக இருந்தது. தற்போது அது குறுகியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத சிக்கல் உள்ளது. மீண்டும் அகலப்படுத்திட வேண்டும். பொது கழிப்பறை கட்ட இடம் இல்லை. அதனால் கழிவுநீர் ஓடையின் மீது அதனை கட்டி பாதாள சாக்கடையில் இணைத்தால் இப் பகுதியில் சுகாதாரம் பாதுகாக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X