சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாவாரி கடலை சாகுபடியில்அதிக மகசூல் பெற ஆலோசனை

Added : ஜூன் 25, 2020
Share
Advertisement

எரியோடு:ஆனி, ஆடி பட்டத்தில் மானாவாரி நிலக்கடலை விதைப்புக்குத் தயாராகி வரும் விவசாயிகள் கூடுதல் மகசூல் பெறும் வழிமுறைகளாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோடை உழவு செய்வதால் களைகள் கட்டுப்பட்டு மண்ணில் நீர் சேமிக்கும் திறன் அதிகமாகி, வறட்சியை தாங்கி பயிர் வளரும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு இட்டு உழவு செய்ய வேண்டும்.ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி மருந்தினை கலந்து, விதை நேர்த்தி செய்து விதைத்தால் வேர் அழுகல் நோய்களை கட்டுப்படுத்தலாம்.

ஜிப்சம் ஏக்கருக்கு 80 கிலோ அடியுரமாகவும், 80 கிலோ ஜிப்சத்தினை 40 - 50 நாளில் மண் ஈரத்துக்கேற்ப இரண்டாவது களை எடுக்கும் நேரத்தில் இட்டு மண் அணைக்கவும். இதனால் விழுதுகள் நன்கு இறங்கி அதிக காய்கள், திரட்சியான நிலக்கடலை கிடைக்கும்.ஊடு பயிராக துவரை, உளுந்து, தட்டைப் பயறு, ஆமணக்கு சாகுபடி செய்தால் பூச்சி நோய்கள் கட்டுப்படுவதுடன் கூடுதல் வருமானம் கிடைக்கும், என தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X